எலான் மஸ்க் ட்விட்டரை 'நாசம்' செய்திடுவார்.. பில் கேட்ஸ் பேச்சால் பரபரப்பு..!

எலான் மஸ்க் ட்விட்டரை 'நாசம்' செய்திடுவார்.. பில் கேட்ஸ் பேச்சால் பரபரப்பு..!
By: TeamParivu Posted On: May 11, 2022 View: 182

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களாக விளங்கும் பில் கேட்ஸ் எலான் மஸ்க் மத்தியில் சமீபகாலமாக அதிகளவிலான எதிர்க்கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பில் கேட்ஸ்-ன் தொப்பையைக் குறித்துக் கிண்டல் செய்து வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பில் கேட்ஸ் தற்போது எலான் மஸ் கையில் டிவிட்டர் போனால் அவ்வளவு தான் எனப் பேசியுள்ளார்.

டிவிட்டர் நிறுவனம் டிவிட்டர் நிறுவனத்தைப் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் எலான் மஸ்க் வாங்க உள்ளார். டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே சிஇஓ பராக் அகர்வால் முதல் பலரையும் நீக்கிவிட்டு புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்து பலரைத் தேர்வு செய்துள்ளார்.

எலான் மஸ்க் ஆரம்பமே அதிரடியாக இருக்கும் எலான் மஸ்க்-ன் நடவடிக்கை முதலீட்டாளர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக டிவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் மிகப்பெரிய அளவிலான தோல்வியை எதிர்கொள்வார் என்பது பலருடைய கருத்தாக உள்ளது.

பில் கேட்ஸ் இந்த நிலையில் பில் கேட்ஸ் புதன்கிழமை வால் ஸ்ட்ரீட்ல ஜர்னல் ஏற்பாடு செய்திருந்து கூட்டத்தில் பேசுகையில், எலான் மஸ்க் நிர்வாகத்தில் டிவிட்டர் நாசமடையும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் கண்ட வெற்றியை டிவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் அடைய முடியாது, ஆனால் இதேவேளையில் எலான் மஸ்க்-ஐ குறைந்து மதிப்பிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்

குறைந்து மதிப்பிட முடியாது ஒரு நிறுவனத்தை வெற்றி அடையவைக்கப் பணமும், சிறந்த இன்ஜினியர்கள் தான் தேவை என்றால் கட்டாயம் எலான் மஸ்க் அதில் வெற்றி அடைவார். ஆனால் சமூகவலைத்தளம் என்பது அப்படியில்லை பல ஆயிரம் கோடி மக்கள் மக்களைச் சார்ந்து உள்ளது இதில் எலான் மஸ்க்-ன் ஆதிக்கமும், எண்ணமும் வெற்றி அடையுமா என்பது மிகப்பெரிய கேள்வி தான்.

போலி தகவல்கள் இதேபோல் டிவிட்டர் தளத்தில் இருக்கும் போலி தகவல்களை எலான் மஸ்க் எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறார், அப்படிக் கண்டுபிடித்த தகவலை எப்படிக் கையாளப் போகிறார். சமூகவலைத்தளத்தில் எந்தத் தரப்பினரையும் சார்ந்து இருக்க முடியாது. ப்ரீ ஸ்பீச் இதேவேளையில் சட்டத்திற்கு உட்பட்ட ப்ரீ ஸ்பீச் என்பது மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது எனப் பில் கேட்ஸ், எலான் மஸ்க் முன் இருக்கும் சவால்களை அடுக்கினார். ப்ரீ ஸ்பீச்-க்கான எலான் மஸ்க்கின் அணுகுமுறை, ட்விட்டரில் தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் மேலும் பரவ வழிவகுக்கும் எனப் பில் கேட்ஸ் கூறினார். உங்க கருத்து என்ன எலான் மஸ்க்-ன் கடுமையான இலக்குகள், திட்டங்கள் ஆகியவை ஒரு நிறுவனத்திற்குள் சரியானதாக இருக்கும். ஆனால் சமுக வலைத்தளத்தில் கேள்விக் குறி தான்..? பில் கேட்ஸ் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன கமெண்ட் பண்ணுங்க.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..