ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை: ஒன்றிய அரசு உத்தரவு...!

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்ப தடை: ஒன்றிய அரசு உத்தரவு...!
By: TeamParivu Posted On: June 13, 2022 View: 451

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவது மற்றும் பிரபலப்படுத்துவது சட்டவிரோதமானது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. 

மேலும் ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இடையே ஆன்லைன் சூதாட்டம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மேலும் ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நிதிச்சிக்கல்களையும் உருவாக்குகிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதனால் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரபலப்படுத்தவோ கூடாது என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இணைய ஊடகங்களும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:
#ஆன்லைன் சூதாட்டம்  # விளம்பரங்கள்  # ஒன்றிய அரசு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..