“சிறுவர்களிடம் ஏன் பைக் தருகிறீர்கள்? நிறைய பேர் சிறுவர்கள் சூப்பர் பைக் கேட்கிறார்கள் என்று சொல்வார்கள். நானும்தான் எனக்கு சூப்பர் பைக் வேண்டும் என சின்ன வயதில் சண்டை போட்டேன். நம்ம தானே குழந்தைகளை சொல்லி திருத்த வேண்டும்” என்று டி.டி.எஃப். வாசன் கூறினார்.
பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் என்.எச். 48 நெடுஞ்சாலையில் வேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்தபோது செப்டம்பர் 17-ம் தேதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவருக்கு கை எலும்பு முறிந்தது. இதையடுத்து, அவர் மீது வழகுப்பதிந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.